Airport-ல் கழுத்தில் தாலியுடன் விக்னேஷ் சிவன் இல்லாமல் நடந்து சென்ற நயன்தாரா - என்னாச்சு?
நடிகை நயன்தாரா மும்பை ஏர்போட்டில் தன் கணவர் விக்னேஷ் சிவனின்றி தனியாக நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் பழக்கம் ஏற்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் ஏராளாமான திரைப்படங்களில் நடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தையை கையில் வைத்திருக்கிறார்.
இவருக்கும் இவரின் காதலருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடத்தேறியது.
மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிச்சார்டில் நடத்தப்பட்ட திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாரூக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்த கொண்டு திருமணத்தை நடத்தி வைத்ததாக தகவல் வெளியானது.
ஹனிமூன்
தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.
உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வந்தனர்.
அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.ஹனிமூன் முடிந்து கடந்த வாரம் இந்தியா திரும்பிய நயன்தாரா தனது இல்லத்திற்கு கூட வராமல் நேரடியாக ஷாருக் கான் நடிக்கும் ஜவான திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை பட பிடிப்பு தளத்திற்கு சென்றதாக தகவல்கள் வெளியானது.
மும்பையில் படப்பிடிப்பு
ஜவான் படப்பிடிப்புகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.இதில் நயன்தாரா, ஷாரூக் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் குடும்ப காட்சியில் தற்போது நயன்தாரா நடித்து வருகிறாராம்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த மாதம் வெளியானது.
இதில் முகம் முழுக்க பேண்டேஜ் சுற்றியப்படி இருந்த ஷாரூக்கானின் லுக் வைரலாக்கப்பட்டது.இந்த படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக சென்ற நயன்தாரா
மும்பையில் நடைபெற்று வந்த ஜவான் திரைப்படத்தில் நடித்து வந்த நயன்தாரா தற்போது மும்பை ஏர்போர்டில் தன் கணவர் விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக மும்பை ஏர்போர்டில் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா எப்போதும் காதல் கணவர் விக்னேஷ் சிவனோடு தான் அதிகம் சென்று வருவார்.
எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு செல்லும் நயன்தாரா தற்போது தனியாக நடந்து வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Just can't stop watching this walk ? #Nayan you are killing ❤️#LadySuperStar #Nayanthara pic.twitter.com/v2Pp8L2uxA
— Aby Nayanthara (@NayantharaAby) July 4, 2022
இதனால்தான் விஜய் எங்களுடைய யாகபூஜைக்கு வரவில்லை... - ரகசியத்தை போட்டுடைத்த சந்திரசேகர்