ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பும் நயன்தாரா,விக்னேஷ் சிவன் - அடுத்து ப்ளான் என்ன?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Marriage
1 மாதம் முன்
110 Shares

நயன்தாரா கடந்த 9 ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நிலையில் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற நிலையில் இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும்,நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பும் நயன்தாரா,விக்னேஷ் சிவன் - அடுத்து ப்ளான் என்ன? | Nayanthara Vignesh Sivan Return To India Honeymoon

பிரமாண்ட திருமணம்

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.  

திருமணத்தில் பிரபலங்கள்

நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஏராளாமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஷாருக்கான்,சூர்யா,போனிகபூர்,அனிருத்,அட்லி உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் திரைப்பிரபலங்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு திருமண வாழ்த்து தெரிவித்தனர். 

ஹனிமூன் 

திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்று இருந்தனர்.

ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பும் நயன்தாரா,விக்னேஷ் சிவன் - அடுத்து ப்ளான் என்ன? | Nayanthara Vignesh Sivan Return To India Honeymoon

அங்கு உற்சாகமாக தங்கள் தேனிலவை கொண்டாடி வருகின்றனர்.தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று தேனிலவின் கடைசி நாளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பும் நயன்தாரா,விக்னேஷ் சிவன் - அடுத்து ப்ளான் என்ன? | Nayanthara Vignesh Sivan Return To India Honeymoon

மேலும் தேனிலவு முடிந்து இந்தியா திரும்பும் போது ஹோட்டல் ஊழியர்கள் தம்பதியருக்கு பிரியாவிடை அளித்துள்ளனர்.

இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். நயன்தாரா விரைவில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் நடிக்கவுள்ளார்.

நயன்தாரா அடுத்து எந்த நடிகருடன்  ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கீழே காமெண்ட் பண்ணுங்க..


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.