திருமணத்திற்கு பிறகு குவியும் பட வாய்ப்புகள் - நயன்தாராவின் 75 வது படம் குறித்து மாஸ் அப்டேட்

Nayanthara Vignesh Shivan
By Nandhini Jul 12, 2022 06:52 AM GMT
Report

கடந்த ஜூன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

நயன்தாரா - விக்னேஷ்

திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

ஹனிமூன்

தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய நயன்தாரா தனது இல்லத்திற்கு கூட வராமல் நேரடியாக ஷாருக் கான் நடிக்கும் ஜவான திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை பட பிடிப்பு தளத்திற்கு சென்றார்.

nayanthara

நயன்தாராவின் 75-வது படம்

இந்நிலையில், நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படம் குறித்த அறிவிப்பு தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கிறது. ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். 

தம்பியின் சடலத்துடன் காத்திருந்த 8வயது சிறுவன்... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!