என்ன அழகு..எத்தனை அழகு..நயன்தாரா திருமண புகைப்படங்கள் வெளியீடு
விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
காதல் திருமணம்
நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் பழக்கம் ஏற்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.
இவருக்கும் இவரின் காதலருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடத்தேறியது.
மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிச்சார்டில் நடத்தப்பட்ட திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடந்தது.
ஹனிமூன்
தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.
உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வந்தனர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது
திருமண புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், சூர்யா ஜோதிகா, மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர் அவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.