திருமணமாகி சில நாட்களிலேயே... வேலைக்கு திரும்பிய நயந்தாரா! வைரலாகும் வீடியோ

Nayanthara Only Kollywood Vignesh Shivan Gossip Today
1 மாதம் முன்

திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா தனது பணிகளில் இறங்கியுள்ளார்.

நயன்தாரா

அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் கழுத்தில் புது தாலியுடன் கெத்தாக நடந்து வரும் நயன்தாராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara-vignesh shivan

கடந்த மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் நெருங்கிய வட்டாரத்தினருக்கு மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.

திருமணம் 

இவர்களது திருமணத்தின் வீடியோ மற்றும் புகைப்பட உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கி இருப்பதால், அந்த வீடியோ எதுவும் சமூக வலைதளத்தில் வெளியாகவில்லை.

விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் சுற்றி சுற்றி வரும் நிலையில், திருமணம் முடித்த கையோடு தாய்லாந்தில் ஹனிமூனிற்கு சென்றிருந்தனர்.

 படப்பிடிப்பு

அங்கு நயனுடன் கழித்த நேரங்களை அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியையும் சேர்த்து வெளியிட்டு வந்தார் விக்னேஷ் சிவன். திருமணமாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்,

இருவரும் தங்களது வேலைக்கு திரும்பி விட்டனர். அந்த வகையில், பாலிவுட்டில், ஷாருக்கானின் ஜவான் பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நயன்தாரா.

வீடியோ வைரல்

மும்பையிலிருந்து சென்னை திரும்புவதற்காக மும்பை ஏர்போர்ட்டில் கெத்தாக நடந்து வந்த நயன் தாராவின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அன்றைய தினம் பல நடிகர்கள் மும்பை ஏர்போர்ட்டில் காணப்பட்டாலும், ஹைலேட்டாக தெரிந்தது நயன்தாரா தான்.  

கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.