கழுத்தில் தாலியுடன் அந்த காட்சியில் நடிக்கும் நயன்தாரா - வெளியான படப்பிடிப்பு தகவல்கள்..!

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir Jul 02, 2022 06:25 AM GMT
Report
100 Shares

நடிகை நயன்தாரா,நடிகர் ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்கும் ஜவான் படத்தில் கழுத்தில் தாலியுடன் குடும்ப காட்சியில் நடித்து வரும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

காதல்

நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் பழக்கம் ஏற்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.

கழுத்தில் தாலியுடன் அந்த காட்சியில் நடிக்கும் நயன்தாரா - வெளியான படப்பிடிப்பு தகவல்கள்..! | Nayanthara Is Acting In That Scene

திருமணம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் ஏராளாமான திரைப்படங்களில் நடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தையை கையில் வைத்திருக்கிறார்.

இவருக்கும் இவரின் காதலருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடத்தேறியது.

கழுத்தில் தாலியுடன் அந்த காட்சியில் நடிக்கும் நயன்தாரா - வெளியான படப்பிடிப்பு தகவல்கள்..! | Nayanthara Is Acting In That Scene

மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிச்சார்டில் நடத்தப்பட்ட திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாரூக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்த கொண்டு திருமணத்தை நடத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

சிவப்பு நிற ஆடையில் மணக்கோலத்தில் வந்த நயன்தாராவுக்கும்,பொன்னிற ஆடையில் வந்த விக்னேஷ்-க்கும் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.

திருமணம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வளைத்தல பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விக்னேஷ் சிவன்.  

சாமி தரிசனம்

திருமணம் முடிந்த கையோடு தனது கணவர் விக்னேஷுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார் நயன்தாரா.

பின்னர் திருமணத்தில் நடிகை நயன்தாராவின் தாய் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

கழுத்தில் தாலியுடன் அந்த காட்சியில் நடிக்கும் நயன்தாரா - வெளியான படப்பிடிப்பு தகவல்கள்..! | Nayanthara Is Acting In That Scene

இதையடுத்து அவரின் பெற்றோரிடம் ஆசி பெற தன் கணவருடன் கேரளா சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தனது உறவினர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

ஹனிமூன்

தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.

உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வந்தனர்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.ஹனிமூன் முடிந்து கடந்த வாரம் இந்தியா திரும்பிய நயன்தாரா தனது இல்லத்திற்கு கூட வராமல் நேரடியாக ஷாருக் கான் நடிக்கும் ஜவான திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை பட பிடிப்பு தளத்திற்கு சென்றதாக தகவல்கள் வெளியானது. 

குடும்ப காட்சிகள்

ஜவான் படப்பிடிப்புகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.இதில் நயன்தாரா, ஷாரூக் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கழுத்தில் தாலியுடன் அந்த காட்சியில் நடிக்கும் நயன்தாரா - வெளியான படப்பிடிப்பு தகவல்கள்..! | Nayanthara Is Acting In That Scene

இதில் குடும்ப காட்சியில் தற்போது நயன்தாரா நடித்து வருகிறாராம்.கடந்த சில நாட்களுக்கு முன் ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த மாதம் வெளியானது.

இதில் முகம் முழுக்க பேண்டேஜ் சுற்றியப்படி இருந்த ஷாரூக்கானின் லுக் வைரலாக்கப்பட்டது.இந்த படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘’அழகா சிரிச்ச முகமே நினைச்சா தோணும் இடமே ‘’ : மகிழ்ச்சியில் விக்னேஷ்சிவன் நயன்தாரா ஜோடி வைரலாகும் புகைப்படம்