‘’அழகா சிரிச்ச முகமே நினைச்சா தோணும் இடமே ‘’ : மகிழ்ச்சியில் விக்னேஷ்சிவன் நயன்தாரா ஜோடி வைரலாகும் புகைப்படம்
விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் கடந்த மாதம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்
இந்த நிலையில் திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக இருந்த நிலையில் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த காதல் தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்திற்கு சென்றனர்.
அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அப்படியே தாய்லாந்தில் இருந்து கிளம்பிவிட்டோம் எனவும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் அண்மையில் தானும், நயனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்தப்பதிவில், நினைச்சா தோணும் இடமே” என்று ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் உள்ள நான் பிழை பாடலில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார், தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தன் செல்போனில் மாறி மாறி புகைப்படம் எடுத்த நயன்தாரா - க்யூட்டான புகைப்படம் வைரல்
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil