தன் செல்போனில் மாறி மாறி புகைப்படம் எடுத்த நயன்தாரா - க்யூட்டான புகைப்படம் வைரல்

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Nandhini Jun 24, 2022 11:37 AM GMT
Report

கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

நயன்தாரா - விக்னேஷ் திருமணம்

7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

தன் செல்போனில் மாறி மாறி புகைப்படம் எடுத்த நயன்தாரா - க்யூட்டான புகைப்படம் வைரல் | Nayanthara Vignesh Shivan

மறுவீடு சென்ற விக்னேஷ்

திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

தாய்லாந்தில் ஹனிமூன்

ஹனிமூனுக்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் தங்கியுள்ளனர். சில நாட்கள் அங்கிருந்துவிட்டு இருவரும் திரும்பி வந்து தங்களது திரைப் பயணத்தில் பிஸியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, ஹனிமூனில் இருக்கும் இந்த தம்பதிகள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாறி மாறி புகைப்படம் எடுத்த நயன்தாரா

இந்நிலையில், நயன்தாரா தன்னுடைய செல்போனில் மாறி மாறி புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.