Thursday, May 8, 2025

Romance Moodல் விக்கியுடன் நெருக்கத்தோடு புகைப்படம் வெளியிட்ட நயன் - வைரலாகும் புகைப்படம்

Nayanthara Vignesh Shivan
By Nandhini 3 years ago
Report

கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

நயன்தாரா - விக்னேஷ் திருமணம்

7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

Romance Moodல் விக்கியுடன் நெருக்கத்தோடு புகைப்படம் வெளியிட்ட நயன் - வைரலாகும் புகைப்படம் | Nayanthara Vignesh Shivan

மறுவீடு சென்ற விக்னேஷ்

திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

தாய்லாந்தில் ஹனிமூன்

ஹனிமூனுக்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் தங்கியுள்ளனர். சில நாட்கள் அங்கிருந்துவிட்டு இருவரும் திரும்பி வந்து தங்களது திரைப் பயணத்தில் பிஸியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நயன்தாரா வெளியிட்ட புகைப்படம் -

தற்போது நயன்தாரா தாய்லாந்திலிருந்து விக்னேஷூடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.