திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனியாக சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் எங்கே?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir Jul 07, 2022 11:29 PM GMT
Report

திருமணத்திற்கு பிறகு முதல்முறை நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் இல்லாமல் கெத்தாக நடந்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காதல் திருமணம் 

நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் பழக்கம் ஏற்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனியாக சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் எங்கே? | Nayantara Went Alone First Time After Marriage

இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும்  ஜுன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடத்தேறியது. மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிச்சார்டில் நடத்தப்பட்ட திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாரூக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்த கொண்டு திருமணத்தை நடத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

ஹனிமூன்

தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.

உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வந்தனர்.

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனியாக சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் எங்கே? | Nayantara Went Alone First Time After Marriage

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.ஹனிமூன் முடிந்து  இந்தியா திரும்பிய நயன்தாரா தனது இல்லத்திற்கு கூட வராமல் நேரடியாக ஷாருக் கான் நடிக்கும் ஜவான திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை பட பிடிப்பு தளத்திற்கு சென்றார்.

தனியாக கெத்தாக நடந்து சென்ற நயன்தாரா 

மும்பையில் நடைபெற்று வந்த ஜவான் திரைப்படத்தில் நடித்து வந்த நயன்தாரா தற்போது மும்பை ஏர்போர்டில் தன் கணவர் விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக மும்பை ஏர்போர்டில் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

7 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா எப்போதும் காதல் கணவர் விக்னேஷ் சிவனோடு தான் அதிகம் சென்று வருவார்.

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனியாக சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் எங்கே? | Nayantara Went Alone First Time After Marriage

இந்த நிலையில் கருப்பு நிற உடையில் மாஸ்க் அணிந்து கெத்தாக நடந்து வந்த நயன்தாராவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

விக்னேஷ் சிவன் எங்கே?

இந்த மாத இறுதியில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனியாக சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் எங்கே? | Nayantara Went Alone First Time After Marriage

இந்த விளம்பர படத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிக்கிறார்.இந்த படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் சென்னையில் பிசியாக இருந்து வருவதால் நயன்தாரா தனியாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Airport-ல் கழுத்தில் தாலியுடன் விக்னேஷ் சிவன் இல்லாமல் நடந்து சென்ற நயன்தாரா - என்னாச்சு?