நவராத்திரி: இறைச்சி விற்க தடை - அதிரடி உத்தரவு!
நவராத்திரி பண்டிகையையொட்டி இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி
நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம், போபாலில் மீன், சிக்கன், மட்டன், முட்டை மட்டுமின்றி
அசைவ உணவுகள் விற்பனைக்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 2ம் தேதி வரை அசைவ உணவுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி விற்க தடை
இதனால் அசைவ ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளை மூட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை பிரிவாக செயல்பட்டு வரும் இந்து அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் குர்கிராம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை நவராத்திரி முடியும் வரை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதுபற்றி அந்த அமைப்பை சேர்ந்த சுரேந்திர தன்வார் கூறுகையில்,
‛‛இந்துக்களின் மதஉணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். இதனால் இறைச்சி, மீன் விற்பனை கடையை மூட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.