அண்ணியின் கற்பை சோதிக்க பெண் செய்த செயல் - கலங்கடிக்கும் சம்பவம்
அண்ணன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடத்தையில் சந்தேகம்
குஜராத், கெரிடா என்ற கிராமத்தில் கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட 28 வயதான அந்த பெண் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவனின் சகோதரிக்கு அண்ணனின் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டு உன் கற்பை நிரூபி எனக் கூறியுள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
மேலும், இருவருடன் சேர்ந்து, அடுப்பை நோக்கி இழுத்துச் சென்று அந்த பெண்ணின் கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் கட்டாயப்படுத்தி அழுத்தியிருக்கிறார்கள்.
இதனால் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின் பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமைறைவானவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.