மருமகளை பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார் - நடுங்கவைக்கும் பின்னணி
மருமகளை பாம்பை விட்டு மாமியார் கடிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
உத்தரப்பிரதேசம், கான்பூர் பகுதியில் ஷாநவாஸ், ரேஷ்மா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவர் குடும்பத்தினருக்கும்,
ரேஷ்மா குடும்பத்தினருக்கு வரட்சணை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து, ரேஷ்மாவின் மாமியார் கூடுதல் வரதட்சணையாக ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார்.
ரேஷ்மா வீட்டினர் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். மீத பணத்தை கேட்டு ரேஷ்மாவை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால், கடும் மன உளைச்சளுக்கு ஆளான ரேஷ்மா மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார். ஆத்திரமடைந்த மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு,
மாமியார் கொடூரம்
அந்த அறைக்குள் ஒரு பாம்பையும் விட்டுள்ளார். பாம்பு ரேஷ்மாவை கடித்ததில் அவர் அலறி துடித்துள்ளார். ரேஷ்மா கெஞ்சியபோதும் அவரது மாமியார் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார்.
உடனே, செல்போன் மூலமாக தனது சகோதரி ரிஸ்வானாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, ரிஸ்வானா தனது அக்கா வீட்டுக்கு வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மேலும், ரேஷ்மாவின் கணவர் ஷாநவாஸ், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் மீது ரிஸ்வானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.