பூமியில் மறைந்திருக்கும் வேற்றுகிரகவாசிகள்; அதுவும் எங்கு தெரியுமா? ஷாக் கொடுத்த நாசா!
வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நாசாவின் விஞ்ஞானி ஒருவர் ஒரு தகவலை முன்வைத்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகள்
பூமியில் மனிதர்கள் வாழ்வதை போலவே வேறு கிரகங்களில் ஏதேனும் உயிர்கள் வாழ்கிறதா? வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மையா என்று பல விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும், பூமிக்கு வேற்றுகிரகவாசிகளின் வருகை குறித்து அறிவியல் சமூகத்தில் பல யூகங்கள் இருந்தாலும், இதுவரை எந்த காட்சி ஆதாரமும் கிடைக்கவில்லை.
அப்படி ஏலியன்ஸ் இருந்தாலும் அவர்கள் உலகில் எங்கு வாழ்கிறார்கள்? மனிதர்களைப் பார்க்க வேற்றுகிரகவாசிகள் மீண்டும் மீண்டும் பூமிக்கு வருகிறார்கள் என்று பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், இது ஒரு மர்மமாகவே உள்ளது. இதுவரை நாசா பல மர்ம சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளது.
அந்த வகையில், தற்போது நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் புகழ்பெற்ற கல்வியாளர் கெவின் நத், வேற்றுகிரகவாசிகள் வேறு எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை அவர்கள் கடலில் வாழ்கிறார்கள் என்று புது தகவல் தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருந்தால்,
எங்கு தெரியுமா?
அவர்களுக்கு சிறந்த இடம் கடலின் அடிப்பகுதியில் உள்ளது. அங்கே ஒரு தளத்தை வேற்றுகிரகவாசிகள் அமைத்திருக்கலாம். இது தொடர்பாக தியரி ஆஃப் எவ்ரிதிங் போட்காஸ்டில் கூறியதாவது, நம் பூமியின் 75% தண்ணீரால் ஆனது, அதனால்தான் பூமியின் பெருங்கடல்களைப் பற்றி நமக்கு இன்னும் அதிகம் தெரியாது.
எனவே, வேற்றுகிரகவாசிகள் ஒளிந்து கொள்வதற்கு இதுவே சிறந்த இடமாகும், அதை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகியது. இது பார்த்த பலர் அதிர்ச்சிக்குள்ளாகின.
மெக்சிகோ நாடாளுமன்றத்திற்கு இரண்டு வேற்றுகிரகவாசிகளின் உடல்களை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். பெருவின் கஸ்கோவில் இருந்து அவை மீட்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினார். ஏலியன்ஸ் உடல்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
அந்த நேரத்தில், விஞ்ஞானிகள் இந்த இரண்டு உடல்களும் பூமியின் மேல் வாழக்கூடிய மனிதர்களாக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறினர். அவை யுஎஃப்ஒ இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. இரண்டும் இப்போது படிமமாகிவிட்டன என கூறியுள்ளனர்.