6 முறை இந்தியாவுக்கு ஏலியன்ஸ் வந்துள்ளார்களா? எந்தெந்த இடங்கள் தெரியுமா?
வேற்றுகிரக வாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் தென்பட்டதாக கூறப்படும் இடங்கள்.
வேற்றுகிரக வாசிகள்
ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்று கிரக வாசிகள் உண்மையாகவே இருக்கிறார்களா? என்பது உலகில் உள்ள பல பேரின் கேள்வியாக உள்ளது. அவ்வப்போது வானத்தில் என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டுகள் வானத்தில் பறப்பதை தாங்கள் பார்த்ததாக சில பேர் கூறுகிறார்கள்.
அதனை பல பேர் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்கள். இது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அவர்கள் மட்டுமே கூற முடியும். அண்மையில் கூட சென்னையில் பறக்கும் தட்டுகள் தென்பட்டதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஏலியன்ஸ் இந்தியா வந்துள்ளனர் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான 5 நிகழ்வைப் பற்றி பார்ப்போம். ஜார்கண்ட் கடந்த 2021ம் ஆண்டு
ஜார்கண்ட்
மாநிலத்தின் ஹசாரிபாக் தெருக்களில் நடந்து செல்லும் ஒரு விசித்திரமான மனித உருவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ அந்த பகுதியைச் சேர்ந்த தீபக் மற்றும் அவரின் நண்பர் செரைகேலா என்ற இடத்திற்கு வாகனத்தில் செல்லும்போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் நிர்வாணமாக ஒரு பெண் சாலையில் நடந்து செல்வது போன்று இருக்கும். இதனைக் கண்டதும் பலர் இதை வேற்றுகிரகவாசிகள் என பதிவிட்டு வந்தனர்.
டெல்லி
கடந்த 2022ல் டெல்லியில் வானத்தில் விசித்திரமான கருப்பு வளையம் ஒன்று தென்பட்டது. இந்த வளையத்தின் அளவு, தடிமன், மற்றும் விட்டம் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தது. இது குறித்த வீடியோ வேகமாக இணையத்தில் பரவியது. இதனை பலரும் வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டுகள் என்று கூறி வந்தனர்.
பூனே
கடந்த 2014ம் ஆண்டு விமானி ஒருவர் பூனே அருகே கிட்டத்தட்ட 26 ஆயிரம் ஆடி உயரத்தில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டு ஒன்று பறப்பதை பார்த்ததாக கூறியுள்ளார்.
கொச்சி
கடந்த 2014ம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சியில் மழை பெய்துகொண்டிருக்கும்போது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் வானத்தில் ஒளி மின்னுவதை ஒரு குழு பார்த்துள்ளனர். இவர்கள் அதை புகைப்படம் எடுத்து வாட்ஸப்பில் வெளியிட அது வேகமாக பரவியுள்ளது. இது ஏலியன்ஸ் என்று சில நபர்களால் கூறப்பட்டு வந்தது.
சென்னை
கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கி அதிகாரியான ரகுநாதன் என்பவர் வானத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பிரகாசமான ஆரஞ்சு நிற ஒளியின் ஐந்து புள்ளிகள் நகர்வதை கண்டுள்ளார். இது அடுத்த சில நொடிகளில் மறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினரும் பார்த்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது . இது வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கொல்கத்தா
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 15 கொல்கத்தா உட்பட மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மர்மமான ஒளி தென்பட்டது என்றும மக்கள் தெரிவித்துள்ளனர். இது வேற்றுகிரக வாசிகளின் என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டுகளாக இருக்கும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள் .
இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தெரிவிக்கப்படவில்லை.