என்னது ஏலியன்கள் உண்மையா?.. 1000 ஆண்டு பழமையான சடலத்தை வைத்து ஷாக் கொடுத்த நாடு!
1000 ஆண்டு பழமையான ஏலியன்கள் சடலத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஏலியன்கள்
வேற்று கிரக வாசிகள், ஏலியன்கள் என்பது சமீப காலமாகி பேசுபொருளாகி வருகிறது. இது போன்ற ஏலியன்கள் உலகில் உள்ளது என்று கூறி வருகின்றனர், ஆனால் இதுவரை யாரும் அது குறித்து நிரூபித்தது இல்லை. தற்பொழுது மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது, இதனை நடத்தி மெக்சிகோ அரசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், மெக்சிகோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் இந்த சடலங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு காட்சிப்படுத்திய ஏலியன்கள் சுமார் 1000 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயல்படும் சுரங்கம் ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 3 கை விரல்கள் மட்டுமே உள்ளது, இவை பார்ப்பதற்கு பாதி மனிதன் போல், ஆனால் பின்னல் பெரிய தலையை கொண்டு வித்தியாசமாகவுள்ளது.
ஏலியன்ஸ் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தி வரும் ஜேமி மவசான் "இது ஆராய்ச்சியின் முக்கிய திருப்பம் என்றும், பூமி மனிதர்களுக்கு மட்டும் அல்ல" என்று கூறியுள்ளார்.