2 மணிநேரம் வானில் மினுக்கிய 2 மர்ம ஒளிகள்.. ஏலியன்கள் நோட்டம்? - அச்சத்தில் மக்கள்!
வானில் திடீரென 2 மணிநேரம் தெரிந்த மர்ம ஒளிகளால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மர்ம ஒளிகள்
கரூர் மாவட்டத்தில், உள்ள குளித்தலை கடம்பர் கோயில், காவல் நிலையம், பேருந்து நிலையம், பெரிய பாலம், பெரியார் நகர் போன்ற இடங்களில் மர்ம ஒளிகள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை 2 மர்ம ஒளிகள் வானில் அங்கும் இங்குமாக பளீச்சென்று மறைந்து மறைந்து தெரிந்துள்ளது.
கடந்த மாதம் சென்னைக்கு அருகே கடலோரத்தில் இதேபோல் வானில் பறக்கும்தட்டுகள் தெரிந்தது, அதனை ஏலியன்களாக இருக்கக்கூடும் என்று அனைவரும் அச்சத்தில் இருந்தனர்.
மக்கள் அச்சம்
இந்நிலையில், கரூரில் மர்ம ஒளியை கண்ட அப்பகுதி மக்கள் ஏலியன்கள் வந்துவிட்டதா என்று அச்சத்தில் உள்ளனர். பின்னர், போலீசார் விசாரணையில் அது கோயில் கும்பாபிஷேகத்தில் வானை நோக்கி யாரோ டார்ச் லைட் அடித்தார்கள் என தெரியவந்தது.
மீன்கார தெருவில் கோயில் கும்பாபிஷேகத்தில் விழா குழுவினர் வானத்தை நோக்கி டார்ச் லைட்டை அடித்ததுதான் இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்ததும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். அதன்பிறகு மக்கள் பயத்தை விடுத்து சாதாரன நிலைக்கு திரும்பினர்.