சென்னை அருகே 2-வது புதிய விமான நிலையம் - இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
மீனம்பாக்கம் விமான நிலையம்
சென்னையில் விமான பயணத்தை அதிகம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
புதிய விமான நிலையம்
இந்நிலையில், சென்னை அருகே புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.