ஏலியன் இருக்கா இல்லையா ? : களத்தில் இறங்கும் நாசா

NASA
By Irumporai Jun 13, 2022 03:30 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

வானில் தென்பட்ட அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு போன்ற மர்ம பொருட்கள் குறித்து கண்டறியவும், அதுகுறித்த தகவல்களை சேகரிப்பதற்குமான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஆய்வில் இறங்கும் நாசா

அதிக ஆபத்துள்ள, அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல, வான்வெளி நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சியை நாசா தீவிரப்படுத்தி உள்ளதா கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பறக்கும் தட்டு உள்ளிட்ட மர்ம பொருட்களின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளில் நாசா ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், வேற்றுகிரக வாசிகள் போன்ற அடையாளம் தெரிந்த, ஆனால், அனுமானிக்க முடியாத மர்ம நடமாட்டங்கள் என, 144 சம்பவங்களை அமெரிக்க உளவுத்துறை பட்டியலிட்டு, ஆய்வு செய்யுமாறு நாசாவிடம் கொடுத்துள்ளது இஅதனை முடிக்க சுமார் ஒன்பது மாதங்கள் ஆகும் மற்றும்100,000 டாலருக்கு மேல் செலவாகாது என்று ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்கிய மர்ம உயிரினம்

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு மர்ம உயிரினம் சிக்கியுள்ளது. இதையடுத்து டெக்ஸாசின் அமரில்லோ நகரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், கேமராவில் பதிவான இந்த உயிரினத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

மே 21 அதிகாலை 1:25 மணியளவில் அமரில்லோ மிருகக்காட்சி சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இந்த உயரினத்தின் படம் பதிவாகியுள்ளதாக அந்த பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலியன் இருக்கா இல்லையா ? : களத்தில் இறங்கும் நாசா | Nasa Confirms First Action On Ufos

மேலும் உயிரினம் பதிவாகியுள்ள இடத்தில் எந்த விதமான அழிவோ அல்லது குற்றச் செயலோ நடந்ததற்கான அறிகுறிகள் காணப்படவில்லையாம். அதேபோல் மிருகக்காட்சிசாலையில் உள்ள எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

களத்தில் இறங்கிய நாசா

இதனை பார்த்த இணையவாசிகள் இது இருட்டில் பதுங்கியிருக்கும் வேற்றுகிரகவாசி என பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வேறு ஏதாவது விலங்காக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது மனித ஆபத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்றும்  குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நாசா, உளவுத்துறை பட்டியலிட்ட சம்பவங்களை விரிவாக விளக்க இயலாவிட்டாலும், அதை மறுப்பதற்கில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பறக்கும் தட்டு போன்ற மர்ம பொருட்கள் குறித்து கண்டறியவும், அதுகுறித்த தகவல்களை சேகரிப்பதற்குமான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பெண்களை கர்ப்பமாக்கிய ஏலியன்கள் : அமெரிக்க ரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல்கள்