பூமி நோக்கி வரும் ரேடியோ அலைகள்! ஏலியன்கள் செய்தியா? ..ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்
பூமியை கடந்து பிரபஞ்சத்தின் மறு முனையிலிருந்து பூமியை நோக்கி ரேடியோ சிக்னல்கள் வருவதாக ரேடியோ அலை ஆய்வகமான CHIME தெரிவித்துள்ளது.
இந்த பூமி பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியை விடவும் குறைவான அளவில் உள்ள சூரிய குடும்பத்தில் பூமி இருந்து வருகிறது. சூரிய குடும்பத்திலே இப்போது வரை தனக்கென தனி சிறப்பினை உடையது பூமி, உயிரினங்கள் ,மலைகள்,கடல்கள் என பூமியை தவிர்த்து மற்ற எந்த கிரகத்தில் இது வரை ஆதாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை.
ஆனால் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள், குறுங்கோள்கள், நிலவுகள் உள்ள இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் உயிரினங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் இது பற்றிய ஆராய்சிகளை மேற்கொண்டனர்.ஆனால் இது வரை பிரபஞ்சத்தின் கொள்கை புரியாத புதிராகவே உள்ளது.
இந்த நிலையில் விண்வெளிக்கு ரேடியோ அலைகளை அனுப்பி பதில் வருகிறதா என்பதை ஆராயும் நடைமுறையை விஞ்ஞானிகள் நிகழ்த்தி பரிசோதனையும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கனடாவில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் ஆய்வு மையத்தில் நூற்றுக்கணக்கான அதிக அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை விண்வெளியில் மிக தொலைவிலிருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வானில் நியூட்ரான் நட்சத்திரங்களால் ஏற்படும் ரேடியோ அலைக்கற்றைகள் பூமியை தாண்டி செல்கின்றன.
தினசரி தோராயமாக 9 ஆயிரம் அதிவேக ரேடியோ அலை தாக்கம் கண்டறியப்படுவதாக கனடாவின் ரேடியோ அலை ஆய்வகமான CHIME தெரிவித்துள்ளது.
ஆனால் அதிக அலைநீளம் கொண்ட அதிவேக FRB ஒரு வருடத்திற்குள்ளாக 535 கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றை மனிதனை போன்றே பிரபஞ்சத்தின் வேறு பகுதியிலிருந்து யாரும் அனுப்பியிருக்க கூடுமோ என ஏலியன் நம்பிக்கையாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ள நிலையில், விஞ்ஞானிகள் அதுகுறித்த தெளிவான விளக்கங்கள் எதுவும் அளிக்கவில்லை.