பெண்களை கர்ப்பமாக்கிய ஏலியன்கள் : அமெரிக்க ரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல்கள்

alien womanpregnant USreport
By Irumporai Apr 08, 2022 12:09 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஏலியன்கள் குறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்து வைத்துள்ள தகவல்களின் ஆவணங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகெங்கும் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் பல வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வேற்றுகிர்கவாசி மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பென்டகன் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தி சன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தி சன் செய்தி நிறுவனத்தின் தகவலின் படி வேற்றுகிரகத்தை சேர்ந்த பொருட்கள் அல்லது ஏலியன் போன்ற அமைப்புகளால் மனிதர்களின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஏலியன்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே மொத்தம் ஐந்து பாலியல் சந்திப்புகள்பதிவாகி உள்ளதாகவும் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் மனிதர்களுக்குக் காயம் ஏற்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மனிதர்களுக்குக் கதிர்வீச்சு பாதிப்பு, மூளை பிரச்சினைகள், நரம்பு பிரச்சினை ஆகியவையும் ஏற்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற வேற்றுகிரகவாசிகள் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வான்வெளியில் இது போன்ற பறக்கும் தட்டுகளை அருகில் சந்திக்கும் போது மனிதர்கள் காயமடைவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பென்டகனின் ரகசிய பறக்கும் தட்டுகள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த 1500 பக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவன ஆவணங்களின் மற்றொரு பகுதிகளில் பேய்களுடன் சந்திப்புகள் என்பதை விவரிக்கும் பகுதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலானது தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது