கருடன் படம்; திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு - வட்டாச்சியர் செய்த செயல்!
திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நரிக்குறவர்கள்
இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் கருடன். நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி
உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கத்திற்கு சென்ற நரிக்குறவகளுக்கு அனுமதிக்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.
அனுமதி மறுப்பு
20க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் குடும்பத்துடன் இன்று படம் பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கவும், டிக்கெட் வழங்கவும் நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது. அதை அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, கோட்டாட்சியருக்காக அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது அலுவகத்தில் இருந்த வட்டாட்சியர் பலராமன் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிறகு, வட்டாட்சியர், நரிக்குறவர்களை சம்மந்தப்பட்ட திரையரங்கிற்கு அழைத்து சென்று டிக்கெட் வாங்கி கொடுத்து,அவரது உதவியுடன் நரிக்குறவர்கள் படம் பார்ப்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றனர்.