நரிக்குறவர்கள் கோரிக்கையினை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய தமிழக அரசு!

covid19 tamilnadu
By Irumporai May 24, 2021 05:16 PM GMT
Report

முதல்வரிடம் வாழ்வாதாரம் பாதித்ததாக நரிக்குறவர்கள் மனு அளித்த நிலையில் அவர்களின் கோரிக்கையினை ஏற்று 24 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கியதால். நரிக்குறவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து வருமானத்தை ஈட்டும் ஏழை, எளியவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்திரா நகரில் 150க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தினர் வசித்து வருகின்றனர்.

நரிக்குறவர்கள்  கோரிக்கையினை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய தமிழக அரசு! | Government Tamil Nadu Request 24 Hours

தினமும் ஊசி, பாசி போன்ற பொருட்களை விற்று பிழைக்கும் இவர்களது வாழ்வாதாரம் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டது.

இது குறித்து நேற்று முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நரிக்குறவ சமுதாயத்தினர் உதவி கேட்டு ஆன்லைன் வாயிலாக மனு அளித்துள்ளனர்.

இந்த மனு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, இன்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனை ஊரக துறை அமைச்சர் K.R,பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இந்திரா நகர் சென்று, நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, சீனி, பால், பருப்பு, மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கினர்.

நரிக்குறவர்கள்  கோரிக்கையினை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய தமிழக அரசு! | Government Tamil Nadu Request 24 Hours

உதவி கோரிய 24 மணி நேரத்திற்குள் நிவாரண பொருட்கள் கிடைத்ததால் நரிக்குறவ சமுதாயத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.