மாற்றப்படும் அண்ணாமலை; அடுத்த தலைவர் யார்? போட்டுடைத்த நாராயணன் திருப்பதி!

Tamil nadu K. Annamalai
By Sumathi Aug 07, 2024 03:54 AM GMT
Report

பாஜக மாநில தலைவர் பதவி குறித்து நாராயணன் திருப்பதி தகவல் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

annamalai

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அண்ணாமலை மாற்றப்படுவாரா? அப்படியானால் யார் தலைவர்? அவரா? இவரா? என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றனர் பாஜக அல்லாத மற்ற கட்சியினர்.

அண்ணாமலையை சுற்றியே இவர்களின் சிந்தனை இருப்பது தெளிவாகிறது. உண்மையில், இது குறித்து சிந்திக்க வேண்டியது பாஜகவினர் தானேயன்றி மற்ற கட்சியினர் அல்ல. தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சி குறித்து எந்த அளவிற்கு மிரண்டு போயுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது இந்நிலை.

அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி? இன்னொருவர் தான் வருவாரு - அண்ணாமலை திட்டவட்டம்!

அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி? இன்னொருவர் தான் வருவாரு - அண்ணாமலை திட்டவட்டம்!

நாராயணன் திருப்பதி தகவல்

குறிப்பாக அண்ணாமலை அவர்களை கண்டு இப்படி பயந்து போயுள்ளார்களே என்று எண்ணத்தோன்றுகிறது. தி மு க ,காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளை போல குடும்ப கட்சியோ அல்லது ஒரு நபர் சார்ந்த கட்சியோ அல்ல பாஜக. திறமைக்கும், திறன் மிகுந்தவர்களுக்கும் பஞ்சமே இல்லாத கட்சி பாஜக. பொழுது போகவில்லையென்றால் சொந்த கட்சி கோஷ்டி பூசலை தீர்க்க முயற்சி செய்யட்டும்;

narayanan tirupati

அதைவிடுத்து, பாஜக விவகாரங்களில் தலையிட்டு மூக்கறுபட்டு ஏன் நிற்க வேண்டும்? யார் தலைவராக இருக்க வேண்டும்? ஏன் மாற்ற வேண்டும்? எப்போது மாற்ற வேண்டும்? எங்கு மாற்ற வேண்டும்? எப்படி மாற்ற வேண்டும்? மாற்ற வேண்டுமா, இல்லையா? என்பதையெல்லாம் பாஜக தலைமை முடிவு செய்யும்.

அதுவரை இந்த ரீல் சுத்துற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நல விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் சில ஊடகங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.