அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி? இன்னொருவர் தான் வருவாரு - அண்ணாமலை திட்டவட்டம்!

Coimbatore AIADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Sumathi Jun 07, 2024 03:23 AM GMT
Report

அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோவை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

edappadi palanisamy - annamalai

“பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என அதிமுக தரப்பில் கூறப்படுவதைப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே எதோ பிரச்சினை தொடங்கியுள்ளதாக நான் பார்க்கிறேன்.

அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடிச்சு மீசையை மழிச்சுக்குறேன் - நடிரோட்டில் சம்பவம்!

அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடிச்சு மீசையை மழிச்சுக்குறேன் - நடிரோட்டில் சம்பவம்!

அதிமுகவுடன் கூட்டணி

2019-ல் ஆளுங்கட்சியாக இருந்தபோது கூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் தான் வெற்றிபெற முடிந்தது. அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே 2024 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி? இன்னொருவர் தான் வருவாரு - அண்ணாமலை திட்டவட்டம்! | Annamalai About Bjp Forming Alliance With Admk

எங்கள் கட்சியின் தொண்டர்கள் மொட்டை அடித்தல், விரலை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும்.

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதில் இருந்தே தெரிந்திருக்கும். இன்னொருவரை கொண்டு வந்ததுதான் நீங்கள் கூட்டணி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.