அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடிச்சு மீசையை மழிச்சுக்குறேன் - நடிரோட்டில் சம்பவம்!

Coimbatore K. Annamalai Lok Sabha Election 2024
By Sumathi Jun 06, 2024 05:34 AM GMT
Report

பாஜக பிரமுகர் நடுரோட்டில் மொட்டையடித்துக் கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

அண்ணாமலை தோல்வி

கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிட்டனர்.

annamalai

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணமலை 4,47,101 வாக்குகள் பெற்றார். 2014 போல் மீண்டும் வெற்றி பெறலாம் என களமிறங்கிய பாஜக சறுக்கியது.

தமிழகத்தில் தோல்வி தான்...ஆனாலும் இது வரை பெறாத வாக்கு சதவீதம்!! சாதித்து காட்டிய அண்ணாமலை!!

தமிழகத்தில் தோல்வி தான்...ஆனாலும் இது வரை பெறாத வாக்கு சதவீதம்!! சாதித்து காட்டிய அண்ணாமலை!!

நடுரோட்டில் மொட்டை

இதற்கிடையில், அண்ணாமலை தோல்வி அடைய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிய தூத்துக்குடி மாவட்டம் பனங்குறிச்சியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், கோவையில் அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன் என மற்ற கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டியுள்ளார்.

அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடிச்சு மீசையை மழிச்சுக்குறேன் - நடிரோட்டில் சம்பவம்! | Man Remove The Hair From His Head Annamalai Loss

இந்நிலையில் அதன்படி, அண்ணாமலை தோல்வியையடுத்து நடுரோட்டில் மொட்டை அடித்து மீசையை மழித்துக் கொண்டார்.