தமிழகத்தில் தோல்வி தான்...ஆனாலும் இது வரை பெறாத வாக்கு சதவீதம்!! சாதித்து காட்டிய அண்ணாமலை!!
தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
மக்களவை தேர்தல்
தமிழ்நாடு நடைபெற்ற முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகம் புதுவையை பொறுத்தமட்டில் 40 தொகுதியையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
வாக்கு சதவீதத்தில்
தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக 25.09%, அதிமுக 20.94% வாக்குகளையும் பெற்றுள்ளது. அதே போல, காங்கிரஸ் கட்சி 10.68% வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில், பாஜக 10.02% வாக்குகளை பெற்றுள்ளது.
இதில், தமிழகத்தில் முதல் முறையாகும். தனித்து தமிழகத்தில் பாஜக பெற்றுள்ள இந்த வாக்குகள், அக்கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறது. இது அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மத்தியில் ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருக்கும் பாஜக, கேரளாவில் முதல் முறையாக ஒரு இடத்தையும், ஒடிசாவில் 24 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சிக்கும் முடிவுரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.