வெறும் ஒரே ஒரு ஓட்டு பெற்ற அண்ணாமலை - பாஜகவினரை அதிரவைத்த கோவை!!
வெளிவரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்தங்கியுள்ளார்.
அண்ணாமலை
தமிழகத்தில் அதிக முக்கியம் பெற்ற தொகுதியாக மாறியது கோவை. அதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு போட்டியிட்டது தான்.
தேர்தல் பரப்புரையில் அதிரடியான கருத்துக்களை தெரிவித்தவர், கோவை திமுக டெபாசிட் இழக்கும் என்றெல்லாம் கூறினார். ஆனால், இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் அவர் பின்னடைவியே சந்தித்துள்ளார்.
திமுகவின் வேட்பளரான கணபதி ராஜ்குமார் 139997 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை விட 26701 வாக்குகளை குறைவாக பெற்று 113296 வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளார் அண்ணாமலை.
ஒரே வாக்கு
3-வது இடத்தில் அதிமுகவின் சிங்கை ராமசந்திரன் இருக்கின்றார். அதில், ஒரு வார்டில் அண்ணாமலை ஒரு வாக்கை மட்டுமே பெற்றுள்ளார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் கணபதி ராஜ்குமார் 5027 வாக்குகளும், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 1541 வாக்குகளை பெற்ற நிலையில், அண்ணாமலை 1852 வாக்குகளை பெற்றார்.
அண்ணாமலை ஒரு வார்டில் ஒரே ஒரு வாக்கை மற்றும் பெற்றுள்ளார். இது தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது.