தேர்தல் தோல்வி; அண்ணாமலை வழங்கிய ராஜினாமா ஏற்பு? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா ஏற்கப்பட்டதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா ஏற்பு?
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு பாஜ தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று அவர் மீது அதிருப்தி எற்பட்டு இருந்தது. இதனால் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதனை நிருபிக்கும் வகையில் மக்களவை தேர்தல் தோல்விக்கு, கூட்டணி தொடர்பாக அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் என்று தமிழக பாஜ தலைவர்களே வெளிப்படையாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இது சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அண்ணாமலை, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தார். அந்த சமயத்தில் அண்ணாமலை வெளிநாடு சென்று படிக்க இருப்பதாக கூறியிருந்தார்.
முக்கிய அறிவிப்பு
இம்மாதம் இறுதியில் அவர் லண்டனுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தமிழக பஜகாவிற்கு புதிய தலைவரை நியமிக்கலாமா.? அல்லது பொறுப்பு தலைவரை நியமிக்கலாமா என்ற ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாகவும், அதனை மத்திய தலைமை ஏற்கெடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. எனவே தமிழகத்தில் அடுத்து யாரை தலைவராக நியமிக்கலாம் என ஆலோசனை தொடங்கியுள்ளதாகவும்,
இதில் தற்போது தமிழக சட்டமன்ற பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவியாக இருக்கும் வானதி சீனிவாசன் இடையே போட்டி உருவாகி உள்ளது. இதற்கான முடிவை ஓரிரு நாட்கள் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது