4 மாத பேரனுக்கு ரூ.240கோடி; டாப் இளம்வயது கோடீஸ்வரர் - ஷாக் கொடுத்த நாராயணமூர்த்தி!
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பேரனுக்கு ரூ. 240 கோடி பங்குகளை பரிசளித்துள்ளார்.
நாராயண மூர்த்தி
பிரபல தகவல் தொழில்நுட்ப இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. இவரது மனைவி சுதா மூர்த்தி. இந்த தம்பதிக்கு ரோஹன் மற்றும் அக்சதா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் அக்சதா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்து 2 மகள்கள் உள்ளனர். ரோஹன் - அபர்ணா கிருஷ்ணன் தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. தற்போது தனது 4 மாத பேரக் குழந்தையான ஏகாக்ரா ரோஹனுக்கு நாராயணமூர்த்தி 15 லட்சம் பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.
பேரனுக்கு பரிசு
இதன் இப்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.240 கோடி. இதன் மூலம் நாட்டின் குழந்தை கோடீஸ்வரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
நாராயணமூர்த்தி மனைவி சுதா மூர்த்தி அண்மையில் எம்பி-யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.83% பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.5,600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.