வாரத்துக்கு 80 மணி நேரம் உழைச்சவரு.. நாராயண மூர்த்தியை காப்பாற்றும் மனைவி!

Infosys N.r. Narayana Murthy
By Sumathi Oct 31, 2023 08:38 AM GMT
Report

நாராயண மூர்த்தியின் கருத்துக்கு சுதா மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.

 70 மணி நேர வேலை

இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு சுமார் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென அண்மையில் கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

infosys narayana murthy

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அவரது மனைவி சுதா மூர்த்து, நாராயண மூர்த்தியின் கருத்துக்கு இந்திய இளைஞர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நலனில் கவனம் செலுத்தி வருபவர்கள் என பெரும்பாலானோர் எதிர்ப்பு எழுந்தது.

மனைவியின் பிறந்தநாள்; வேலையை தூக்கி எறிந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி - சுவாரஸ்யம்!

மனைவியின் பிறந்தநாள்; வேலையை தூக்கி எறிந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி - சுவாரஸ்யம்!

சுதா மூர்த்தி விளக்கம்

தற்போது உள்ள பணி சூழல், ஆரோக்கிய நலன், ஊழியர்களுக்கான ஊதியம், முதலாளித்துவம், உழைப்பு சுரண்டல் போன்றவற்றை முன்வைத்து சமூக வலைதளங்களில் கருத்துகள் வைரலாக வலம் வந்தன.

sudha murthy

அதே நேரத்தில் சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். அவர் கடின உழைப்பை நம்புபவர். அதற்கான வேட்கை அவருக்குள் இருந்தது. வாரத்துக்கு சுமார் 80 அல்லது 90 மணி நேரம் வரை உழைத்தவர். அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அதனால் அவர் தனது சொந்த அனுபவத்தை சொல்லி இருந்தார் எனக் கூறியுள்ளார்.