மனைவியின் பிறந்தநாள்; வேலையை தூக்கி எறிந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி - சுவாரஸ்யம்!
மனைவி குறித்த சுவாரஸ்ய தகவலை இன்போசிஸ் நாராயண மூர்த்தி பகிர்ந்துள்ளார்.
நாராயண மூர்த்தி
பெங்களூரில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாராயண மூர்த்தி பங்கேற்று உரையாடினர். அப்போது, “வாழ்க்கையில் என் மனைவியின் ஆதரவு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமான விஷயம்.
கடந்த 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி என் மனைவி சுதா மூர்த்தி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது நான் என் மனைவியை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதுடன் நான் என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன் என்று தெரிவித்தேன்.
நல்ல தோழி
எப்போதும் போலவே புன்னகைத்த என் மனைவி, இதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்து வாழ்வோம். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களால் முடியும்” என்று கூறியதாக தெரிவித்தார். மேலும், என் மனைவி எனக்கு நல்ல தோழியாக இருந்தார்.
அவரிடம் மட்டும்தான் நான் அனைத்து உண்மைகளையும் பகிர்ந்து கொண்டேன். அவர் எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து, சுதா மூர்த்தி பேசுகையில் வீட்டிலும் தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெற தன் கணவர் மேற்கொண்ட முயற்சிகளையும் அவரது மன உறுதியையும் பகிர்ந்துக் கொண்டார்.