நெப்போலியன் மகனுக்கு திருமணம்; முதல்வருக்கு நேரில் பத்திரிக்கை - மருமகள் யார் தெரியுமா?

Napoleon M K Stalin Chennai
By Sumathi Jul 03, 2024 04:09 AM GMT
Report

நெப்போலியன் மகன் நிச்சயதார்த்த பத்திரிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

நெப்போலியன்

1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் வில்லனாக அசத்தியுள்ளார்.

நெப்போலியன் மகனுக்கு திருமணம்; முதல்வருக்கு நேரில் பத்திரிக்கை - மருமகள் யார் தெரியுமா? | Napoleon Son Wedding Future Daughter In Law

2001ல் திமுகவில் இணைந்த இவர் பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின், பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் துறைத் தலைவராக இருந்தார். இதற்கிடையில் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

ஃப்ளைட்ல வந்தால் உயிருக்கே ஆபத்து - மகனுக்காக பெரிய ரிஸ்க் எடுக்கும் நெப்போலியன்!

ஃப்ளைட்ல வந்தால் உயிருக்கே ஆபத்து - மகனுக்காக பெரிய ரிஸ்க் எடுக்கும் நெப்போலியன்!

மகன் திருமணம்

அதில் மூத்தமகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாது. எனவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் குடும்பத்துடன் அங்கேயே செட்டிலானார். இரண்டாவது மகன் குணால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் பட்டப்படிப்பை முடித்தார்.

napoleon meets cm stalin

இந்நிலையில் மகன் தனுஷூக்கு அக்ஷயா என்கிற பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கு நிச்சயதார்த்த பத்திரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நெப்போலியன் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, ரசிகர்களும் அவருடைய கட்சி உறுப்பினர்களும் நெப்போலியனின் மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.