விஜய் முதலில் அப்பா-அம்மாட்ட பேசட்டும்..அப்புறம் பார்க்கலாம் - விளாசிய நெப்போலியன்

Vijay Tamil Cinema
By Sumathi 1 மாதம் முன்

நடிகர் நெப்போலியன் விஜய்யுடன் பேசுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக விஜய்க்கும், சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்றும், இவருக்கும் விவாகரத்து செய்துகொண்டார்கள் என்றும் வதந்திகள் வெளிவருகிறது.

விஜய் முதலில் அப்பா-அம்மாட்ட பேசட்டும்..அப்புறம் பார்க்கலாம் - விளாசிய நெப்போலியன் | Actor About Vijay And His Parents Issue

ஆனால், இது எதுவும் உண்மையான தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவரது அப்பா சந்திரசேகருடனும் சுமூகமான உறவு இல்லை என்றும் அவருடன் சரியாக பேசுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் நெப்போலியன் மற்றும் விஜய் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையால் இன்னும் பேசாமல் இருக்கிறார்கள்.

விளாசிய நெப்போலியன்  

அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசிய நெப்போலியன், 15 வருடத்திற்கு முன் விஜய்யுடன் சில பிரச்சனை. அதனால் அப்போது இருந்து அவரது படத்தை பார்ப்பது இல்லை. இப்போது நான் அவருடன் பேச தயார், ஆனால் அவர் தயாரா அதை நீங்கள் தான் கேட்க வேண்டும்.

முதலில் அவர் அவரது அப்பா-அம்மாவுடன் பேசட்டும், பிறகு பார்க்கலாம் என பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.    

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.