சாதி குறித்து சர்ச்சை வீடியோ; திமுக கூட்டணி வேட்பாளர் அதிரடி மாற்றம் - புதுவேட்பாளர் யார்?
நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
சர்ச்சை வீடியோ
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதில் திமுக கூட்டணி மும்முரமாக செயல்பட்டு கூட்டணி, தொகுதிப் பங்கீடு என அனைத்தையும் முடித்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. அதில், திமுக கூட்டணியில் உள்ள கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சூரியமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், டந்த சில நாட்களாக எஸ்.சூரியமூர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது.
வேட்பாளர் மாற்றம்
அதில், அவர் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம் என்பது போல பேசியிருந்தார்.
இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு, அது பொய்யான வீடியோ. தான் அது போல பேசவில்லை என்று விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், சூரியமூர்த்திக்கு பதிலாக நாமக்கல் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.