பாஜக கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கிய ஓபிஎஸ்...தொகுதி, சின்னம் தெரியுமா..?
வரும் மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியை மீட்க சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
வரும் தேர்தலில் அவர், தனது ஆதரவை பாஜக கூட்டணிக்கு அளித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று அவர்களது கூட்டணி இறுதியாகியுள்ளது.
அதில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு பாஜக அளித்துள்ளது. தென்தமிழக தொகுதியான ராமநாதபுரத்தில் அவர் போட்டியிடுகிறார்.
தொகுதி, சின்னம்
ஓபிஎஸ் அணி சார்பாக வேட்பாளராக ஓபிஎஸ் களமிறக்கப்பட்டுள்ளார். கூட்டணி ஒப்பந்தம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியது வருமாறு,
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு. இரட்டை இலை சின்னத்தை பெற சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சுயேட்சை சின்னத்தில் நின்று பலத்தை காட்ட உள்ளோம்