மக்களவை தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை - அறிவித்த பாஜக..எந்த தொகுதியில் தெரியுமா..?
பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பாஜக
தமிழக பாஜக கடந்த சில வருடங்களாக பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் என்றால் அது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்றால் அது மிகையாகாது.
சுறுசுறுப்பான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவர், "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை அவரின் அரசியல் செல்வாக்கை உயர்த்தியது.
வேட்பாளர் பட்டியல்
வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என பெரிதாக கருத்துக்கள் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜகவின் 3-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் அண்ணாமலை கோவை தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சலசலப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வெளியிட்ட தமிழக வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு,
மத்திய சென்னை வினோஜ்.பி.செல்வம்
தென் சென்னை தமிழிசை
தூத்துக்குடி நயினார் நாகேந்திரன்
கோவை அண்ணாமலை
வேலூர் ஏ.சி.சண்முகம்
கன்னியாகுமரி பொன்.ராதாகிருஷ்ணன்
நீலகிரி எல்.முருகன்
பெரம்பலூர் பாரிவேந்தர்
கிருஷ்ணகிரி நரசிம்மன்