அதிமுகவிடம் அண்ணாமலைக்காக ராஜ்ய சபா சீட் கேட்கப்படுமா? நயினார் சூசகம்
அண்ணாமலைக்கு ராஜ்ய சபா சீட் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
அண்ணாமலைக்கு சீட்
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் எம்.சண்முகம், பி.வில்சன், மதிமுகவின் வைகோ ஆகியோருக்கு திமுக தரப்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ராஜ்ய சபா செல்வது உறுதியாகியுள்ளது. தற்போது அதிமுக தரப்பில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நயினார் பதில்
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அண்ணாமலைக்காக அதிமுகவிடம் பேசப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் லண்டனுக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் பதில் அளிக்க வேண்டும். ராஜ்ய சபா தேர்தல் தொடர்பாக என்னால் எந்த பதிலும் அளிக்க முடியாது.
எங்களிடம் 4 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். அதனால் பாஜக தலைமை என்ன சொல்கிறார்களோ, அதனை பின்பற்றுவோம். தற்போது அதிமுக உடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.