1 மாசமா தூக்கம் வரல; நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் மாற்றப்பட்டேன் - அன்புமணி ராமதாஸ்
நான் என்ன தவறு செய்தேன்? ஏன் மாற்றப்பட்டேன் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். அதில், “நான் ஏன் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டேன் என நினைத்து நினைத்து ஒரு மாதமாக எனக்கு தூக்கம் வரவில்லை.
மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன்? ஏன் மாற்றப்பட்டேன். பாமக தலைவர் பதவியில் இருந்து எதற்கு என்னை மாற்றினார்கள் என தெரியவில்லை. எங்கள் குடும்ப பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மற்றவர்களின் தலையீடு எதுவும் தேவையில்லை.
நான் என்ன தவறு செய்தேன்?
தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. திட்டமிட்டு ஆட்சியைப் பிடிப்போம். என் கனவு, இலட்சியம் எல்லாமே, அய்யா என்ன நினைத்தாரோ அதைத்தான் நிறைவேற்றினேன். இனியும் ஒரு மகனாக அய்யா என்ன நினைக்கின்றாரோ அதைதான் நிறைவேற்றுவேன்.
தொடர்ந்து அய்யா உடன் கட்சிக்காகவும் சங்கத்திற்காக உழைத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்வேன் செய்து கொண்டிருக்கிறேன். இட ஒதுக்கீடு நம்மளுக்கான சமூகநீதியை பற்றி பதிவு போடுங்கள். நமக்குள்ளே அடித்துக் கொள்ளாதீர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க, இப்போது நினைத்தாலும் 2 மாதத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.