ED இல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம்; அடிமை கட்சியல்ல - உதயநிதி ஸ்டாலின்
EDக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு முடிவில், ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள், நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
பின் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது மோடி தலைமையில் நடந்து வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தோம். சுணக்கமாக நடந்து வரும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடிமை கட்சியல்ல
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்பதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யத்தான் செய்வார்கள். ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறோம். EDக்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம்.
மிரட்ட முயற்சித்தார்கள்.. மிரட்டி அடிபணிய வைப்பதற்கு திமுக அடிமை கட்சியல்ல. இது சுயமரியாதை கட்சி. தப்பு செய்கிறவர்கள் தான் பயப்பட வேண்டும், நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் வகையில் கபடி, பாக்ஸிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சேர்த்து புதிய மல்டி ஸ்போர்ட்ஸ் மைதானப் பணிகள் டிசம்பர் மாதத்தில் முடியும்” என தெரிவித்துள்ளார்.

Viral Video: சிறுமியை துரத்திய நாய் கூட்டம்... நொடிப்பொழுதில் உயிர்தப்பிய திக் திக் நிமிடம் Manithan

இலங்கையில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பத்திரிகையாளர்கள்! கேள்வி எழுப்பியுள்ள அமெரிக்க தூதரகம் IBC Tamil
