திமுகவுக்கு தாவும் நயினார் நாகேந்திரன்? திருச்சி சூர்யா கொடுத்த ஷாக்!
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்கவுள்ளதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்து பல தகவல்களைப் பகிரங்கமாகப் பேசி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
நயினார் தனக்குப் பதவியே வேண்டாம் என்பதில் உறுதியாக நிற்கிறார். அமித்ஷா, நட்டா வரை பேசியும் அவர் மசியவில்லை. அவர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் கையை மீறி செலவு செய்துவிட்டார்.
அடுத்து 2026இல் அவர் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றால் பணம் தேவை. அதற்கு பாஜக மாநிலத் தலைவராகிவிட்டால் அதற்குச் செலவு செய்யப் பணம் வேண்டும். ஆகவே அவர் உஷாராக மறுத்துவருகிறார்.
கட்சி மாறும் நயினார் நாகேந்திரன்?
நயினார் தனக்கு வயதாகிவிட்டதால் மகனுக்கு பாஜகவில் பதவி கேட்கிறார். ஆனால், வாரிசு அரசியலைக் காரணம் காட்டி மாநிலத் தலைவர் பதவி கொடுக்க மறுக்கிறார். இந்தக் குழப்பத்தில்தான் அவர் கட்சி மாறலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஐவர் குழுவில் ஒருவராக இடம் தருவதாகப் பல ஆண்டுகளாக நயினாரை அழைத்து வருகிறார். ஆனால், இவர் போகவில்லை. நாளை சசிகலா அதிமுகவுக்குள் வந்தால் நயினாருக்குப் பிரச்சினை.
இந்நிலையில்தான் திமுகவுக்குப் போக இவர் திட்டமிட்டு வருகிறார். அங்கே மகனுக்கும் பதவி வாங்கிவிடலாம், பிரச்சினை இருக்காது என நினைத்துள்ளார் எனப் பேசியுள்ளார்.