கொலைகளை இயல்பாக்கியதே திமுக அரசின் சாதனை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Karthikraja Sep 09, 2024 10:23 AM GMT
Report

சட்ட ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுசெயலளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

edappadi palanisamy

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

சட்ட ஒழுங்கு

தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா திமுக அரசின் மூன்றாண்டு சாதனை.வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய விடியா திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? 

தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். 

விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். என கூறியுள்ளார்.