மொத்தமாக சரிந்த கட்டிடம்; இந்தியாவிலும் நிலநடுக்க தாக்கம் - 20 பேர் பலி !
மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று அடுத்தடுத்து பதிவாகியுள்ளது.
சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி காட்சிகள்
தொடர்ந்து ஒரு கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுவதும், ஒரு கட்டிடத்தில் நீச்சல் குளம் குலுங்கி அதில் இருந்த தண்ணீர் மாடியில் இருந்து தெருவில் கொட்டுவது போன்ற காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: Video shows the moment a skyscraper under construction collapsed due to earthquake in Bangkok. pic.twitter.com/OIdxc4epKf
— PM Breaking News (@PMBreakingNews) March 28, 2025
இந்த தாக்கம் பாங்காக் நகரிலும் ஏற்பட்டு தற்போது கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் முழுவதுமாகச் சரிந்து விழுந்தது. மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.