பேஸ்புக்கிற்கு திடீர் தடை; பொதுமக்கள் அதிருப்தி - என்ன காரணம்?

Facebook Papua New Guinea
By Sumathi Mar 27, 2025 07:25 AM GMT
Report

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியா

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த நாடு சுற்றுலா தளங்களுக்கு பிரபலமாக விளங்கி வருகிறது.

facebook

இங்கு மக்கள் அதிகமாக பேஸ்புக்கைதான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி, சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஐரோப்பாவில் குடிபெயர விருப்பமா? ரூ 27 லட்சம் வழங்கும் நாடு - விவரம் இதோ..

ஐரோப்பாவில் குடிபெயர விருப்பமா? ரூ 27 லட்சம் வழங்கும் நாடு - விவரம் இதோ..

பேஸ்புக்கிற்கு தடை 

இதற்கிடையில், பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது.

papua new guinea

இந்நிலையில், அங்கு பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். தற்போது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.