விருப்பத்துடன் நடந்தால் பாலியல் வன்கொடுமை ஆகாது - உயர்நீதிமன்றம்!
விருப்பத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வராது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் உறவு
பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் காதலில் இருந்துள்ளார். இருவரும் பாலியல் உறவிலும் இருந்துள்ளனர். இதற்கிடையில், அந்த ஆண் வேறொரு பெண்ணுடன் காதல் ரீதியாக பழகி வந்துள்ளார்.
இதனால், அந்த ஆண் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அப்போது ஏமாற்றப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரரை குற்றம்சாட்டப்பட்டவர் கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார் என்று வாதாடினார்.
நீதிமன்ற தீர்ப்பு
இந்நிலையில் இதனைக் கேட்ட நீதிபதி, புகார் அளித்துள்ள பெண்ணே, தான் அந்த நபரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இப்போது அவர்களுக்கிடையில் காதல் இல்லை என்பதற்காக இதற்குமுன் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டது பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 375 கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
பழைய சட்டத்தின்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரதீய சட்டங்களின்படி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.