சிறையில் கைதியுடன் பாலியல் உறவு - பெண் அதிகாரியின் வீடியோவால் அதிர்ச்சி!
பெண் அதிகாரி ஒருவர் சிறையில் கைதியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான வீடியோ
இங்கிலாந்து நாட்டில் தெற்கு லண்டன் வாண்ட்ஸ்வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறைச்சாலை கைதியுடன் பெண் அதிகாரி ஒருவர் பாலியல் உறவில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிண்டா டி சவுசா அப்ரு (31) என்ற பெண் அதிகாரி கைதியின் அறையில் கைதி ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார்.
ராஜினாமா
இதனை மற்றோரு கைதி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பெண் அதிகாரி லிண்டா டி சவுசா அப்ரு தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். பெண் அதிகாரியே குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.