ஜோ பைடனின் மகன் குற்றவாளி; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - தண்டனை விவரம்?
ஜோ பைடனின் மகன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்குயுள்ளது.
மகன் குற்றவாளி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் மீது போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்க முயற்சித்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக டெலாவேர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
கடந்த 2018-ஆம் ஆண்டு போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, ஹன்டர் பைடன் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அமெரிக்காவில் பொது மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்,
போதைப் பொருள் பழக்கம் உடையவர்கள் அதை வாங்க முடியாது.இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் 'போதைப் பொருள் பழக்கம் கிடையாது' என்று ஹன்டர் பைடன் பொய்யாகக் கூறியதற்கு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
தண்டனை விவரம்?
போதைப்பொருள் பயன்படுத்துபவராக இருந்தபோது சட்டவிரோதமாக 11 நாட்கள் துப்பாக்கியை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. மேலும், ஹண்டரின் முன்னாள் மனைவி, முன்னாள் காதலி மற்றும் அவரின் மைத்துனர் மற்றும் பிற அரசு தரப்பு சாட்சிகளை வைத்து குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனால் ஹண்டர் பைடனுக்கு முதல் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், இரண்டாவது குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகளும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு மேலும் 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை என மொத்தம் 25 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தண்டன விவரங்கள் அடுத்த 120 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அதிபர் ஜோ பைடன், இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும்,
தனது மகன் மேல்முறையீட்டைக் கருதுவதால் நீதித்துறை செயல்முறையை தொடர்ந்து மதிப்பதாகவும் கூறினார். தானும் தனது மனைவி ஜில்லும் தங்கள் மகனை நேசிப்பதாகவும், அவர் இன்று இருக்கும் மனிதரைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.