முஸ்லீம்கள் தாம் அதிகம் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துறாங்க - ஓவைசி பரபர பேச்சு!

Narendra Modi Rajasthan
By Sumathi Apr 30, 2024 03:43 AM GMT
Report

குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் அதிகம் காண்டம் பயன்படுத்துவதாக ஓவைசி தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறப்பு

ராஜஸ்தான் பிரச்சாரத்தில் நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

owaisi

இதனைத் தொடர்ந்து, அதிக குழந்தை பெற்றவர்கள் மற்றும் நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா? என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.

சிறுபான்மையினருக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் அசாதுதீன் ஓவைசி - அரசியல் பாதை!

சிறுபான்மையினருக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் அசாதுதீன் ஓவைசி - அரசியல் பாதை!


ஓவைசி கருத்து

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாகிவிடும் என இந்துக்கள் மத்தியில் பிரதமர் மோடி அச்சத்தை விதைக்கிறார். எவ்வளவு காலம் முஸ்லிம்கள் பற்றி அச்சத்தை உருவாக்குவீர்கள்?

முஸ்லீம்கள் தாம் அதிகம் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துறாங்க - ஓவைசி பரபர பேச்சு! | Muslims Use Condoms Most Says Owaisi

எங்கள் மதம் வேறு ஆனால் நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள் என்று நீங்கள் ஏன் அச்சத்தை உருவாக்குகிறீர்கள்? தரவுகளின் படி, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மக்கள்தொகை குறைந்துள்ளது.

குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் அதிகம் காண்டம் பயன்படுத்துகிறார்கள். இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. இந்தியாவில் கருத்தடை சாதனங்கள் அதிகம் பயன்படுத்துவர்கள் முஸ்லிம்கள் தான் எனத் தெரிவித்துள்ளார்.