16 வயதிலேயே முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
முஸ்லிம் தம்பதியரின் மைனர் திருமணத்தை அங்கீகரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் 16 வயதில் முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
மைனர் திருமணம்
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தங்கள் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி, முஸ்லிம் இளம் தம்பதியர் மனுத்தாக்கல் செய்தனர். மணமகனுக்கு 21 வயது நிறைவு பெற்ற போதிலும்,
மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே ஆகி இருந்ததால் இவ்வழக்கு பரபரப்புக்கு உள்ளானது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடியின் ஒற்றை நீதிபதி அமர்வு தம்பதியர் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகிய இருவரது வாதங்களையும் கேட்டது.
அடிப்படை உரிமை
பெற்றோருக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்றும் மணப்பெண் 18 வயதை எட்டாத மைனர் என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜஸ்ஜித் சிங், முஸ்லிம் தம்பதியரின் மைனர் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், இந்திய அரசியலமைப்பில் எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது என்று நீதிபதி ஜஸ்ஜித் சிங் குறிப்பிட்டார்.
தகுதி
மேலும் இஸ்லாமிய ஷரியா விதியை மேற்கோள் காட்டி நீதிபதி, முஸ்லிம் பெண்ணின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்றார். சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் 'முஹம்மதின் சட்டத்தின் கோட்பாடுகள் என்ற
புத்தகத்தின் பிரிவு 195 இன் படி, மணப்பெண் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், அவர் விரும்பும் நபருடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதியுடையவர்.
மணமகன் 21 வயதுக்கு மேற்பட்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மனுதாரர்கள் இருவரும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண வயதுடையவர்களே என்றார் நீதிபதி ஜஸ்ஜித் சிங்.
மனுதாரர்களின் அச்சத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் கண்களை மூடிக்கொள்ள முடியாது. தம்பதியருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கவும் பதன்கோட் காவல் கண்காளிப்பாளருக்கு உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பை முடித்தார் நீதிபதி.
எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும் : நிஜமான காத்து வாக்குல ரெண்டு காதல்