அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ..ஆளே மாறிபோன கங்கை அமரன் -திடீர்னு என்ன ஆச்சு..?

Tamil Cinema Gangai Amaren
By Vidhya Senthil Jan 06, 2025 05:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

     இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்கை அமரன்

தமிழ் திரைத்துறையில் 1982 ஆம் கோலி கூவுது என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகக் கங்கை அமரன் அறிமுகமானார். தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன்,கரகாட்டக்காரன்,கோயில் காளை ,கோழி கூவுது உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி

அது மட்டுமில்லாமல் கிராமத்துக் கதைகள் இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவரது சகோதரர் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.இவரது மகன் வெங்கட் பிரபு தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்!

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்த நிலையில் 77 வயதான கங்கை அமரன் பிரபல தயாரிப்பு நிறுவனம் எடுத்துவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்கக் கங்கை அமரன் மானாமதுரை வந்துள்ளார்.

 தீவிர சிகிச்சை 

அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி

இங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து டிஸ்சார்டு செய்யப்பட்டுள்ளார்